• Breaking News

    தமிழக மீனவர்கள் 19 பேர் கைது.....

     


    வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லை பகுதியில் நேற்று இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி படகுகளுடன் சிறைபிடித்து கொண்டு சென்றனர்.இதே போல் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த ஒரு படகு மற்றும் அதிலிருந்து  6 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.

    நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறி மீனவர்கள் 19 பேரையும் அவர்களின் படகுகளையும் சிறை பிடித்துச் சென்ற இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய நடவடிக்கைக்கு மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் பெயர் மற்றும் கூடுதல் விவரங்கள் இலங்கை கடற்படை விசாரணைக்கு பின்னரே அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.கிட்டத்தட்ட இந்திய கடற்பகுதி முழுவதையுமே இலங்கை கடற்படையினர் தங்களுடையதாக கூறிக்கொண்டு இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வது தொடர் வாடிக்கையாக உள்ளது. ஆனால் ஒரு மீனவர் கூட பாதிக்கப்படவில்லை என்று மத்திய அரசு பெருமிதத்துடன் கூறி வருவதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    No comments