இன்றைய ராசிபலன் 18-09-2023
மேஷம் ராசிபலன்
சமீபத்தில் ஏதேனும் சிந்தனைகள் உங்கள் மனதில் காலதாமதமாக தோன்றுகிறதா? புதிதாக ஏதாவது ஒன்றை புதியதாக செய்ய வேண்டும் என்ற சிந்தனை உங்களுக்கு மேலோங்குகிறதா? இப்போது இதைத் தொடங்க சிறந்த நேரமாக இருக்கும். மேலும், அவைகள் சரியான நிலையில் கனகச்சிதமாக பொருந்துவதாகத் தோன்றும். புதிய தொடர்புகள் அமைய வாய்ப்புள்ளது. இவை அனைத்தும் உங்களிடம் தான் உள்ளது. பிரபஞ்சத்தால் மட்டுமே இப்படிச் செய்ய முடியும்.
ரிஷபம் ராசிபலன்
நீங்கள் பேசும் வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருங்கள், கடுமையான வார்த்தைகளைப் பேசுவது எந்தவொரு சூழ்நிலையையும் மோசமானதாக மாற்றி விடும். இதனால் உங்களுக்குத் தாங்கிக் கொள்ள முடியாத மன அழுத்தமும், கட்டுப்படுத்த முடியாத கோபமும் உண்டாக்கும். இந்த நாளில் சிறிய ஓய்வு எடுத்துக் கொள்வது சிறந்ததாக இருக்கும். இந்த ஓய்வு உங்களுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுப்பதுடன், உங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்யும். மிகுந்த கட்டுப்பாடு கொண்டவராக இருக்க வேண்டாம், உங்களிடம் உள்ள சில பொறுப்புகளை விட்டுவிட முடிவு செய்யுங்கள்.
மிதுனம் ராசிபலன்
இன்றைய நாளில் தாராள மனப்பான்மையுடன் செயல்படுவது மிகவும் அவசியம். முகத்தில் புன்னகையை மட்டும் வைத்துக் கொண்டு, முரட்டுத்தனமாகவும், இரக்கமற்ற மனிதராகவும் இருக்கக் கூடாது. நேர்மறை ஆற்றலுடன் இருப்பது இந்த நாள் முழுவதையும் நல்ல நாளாக மாற்ற உங்களுக்கு உதவும். இதன் மூலம் நிறைய நல்ல விஷயங்களால் நீங்கள் ஈர்க்கப்படுவீர்கள். ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டு, பயம் காரணமாக கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டாம். உங்கள் பொருளாதார நிலைமை நிலையாக இருக்கிறது. ஆகையால், எதிர்காலத்திற்கான புதிய முயற்சிகள் பற்றிச் சிந்திக்கத் தொடங்குங்கள்.
கடகம் ராசிபலன்
நீண்ட காலமாக, நீங்கள் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என விழைகிறீர்கள். கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு ஆதரவளிப்பதால், தற்போது இது ஒரு சிறந்த தருணம் ஆகும். சரியான காய் நகர்த்தல்களில் ஈடுபடுங்கள். அப்போது, நீங்கள் ஒரு உன்னத நிலையினை அடைவீர்கள். உங்களது அன்பிற்கினிய நண்பர்களும், நலம் விரும்பிகளும் அவர்களின் பரிந்துரைகளை கொடுத்துள்ளனர். அதிலிருந்து முடிந்தவரை பயனடைவது உண்மையிலேயே உங்களிடத்தில் தான் உள்ளது.
சிம்மம் ராசிபலன்
நீங்கள் சமீபத்தில் பதற்றமாக உள்ளீர்கள். உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைப் பற்றித் தொடர்ந்து கவலைப்பட வேண்டாம். நேர்மறையான சிந்தனை, மேம்பட்ட எண்ணங்கள் மற்றும் நல்ல விஷயங்களில் உங்கள் நேர்மறை ஆற்றலைப் பயன்படுத்துங்கள். மன அழுத்தம் மற்றும் பதற்றம் உங்களை உண்மையில் பாதிக்கிறது என்பதை நீங்கள் உணரும் நேரம் இதுவாகும். நீங்கள் இதை ஏற்றுக் கொள்வதை விட அதிகமாகச் சிந்திக்கிறீர்கள். இந்த விஷயங்களை உங்களை மிகவும் கடினமாக்கும். நீங்கள் அது குறித்துச் சிந்திக்க முயல்கிறீர்கள். அதிகப்படியான சிந்தனைக்கும், கவனம் செலுத்துவதற்கும் இடையேயான இடைவெளியை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
கன்னி ராசிபலன்
உங்களது எண்ணங்கள் உங்கள் செயல்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உங்களது வழியில் உங்களுக்கு ஒரு ஆச்சர்யமான வாய்ப்பு அமைய உள்ளது. அது கைநழுவி செல்லும் முன்பு, அதை இறுகப்பற்றுங்கள். இன்று, உங்களது கருத்தை தெரிவிக்க வெட்கப்படாதீர்கள். தெளிவாகச் சொல்லப்போனால், உங்களிடம் சில நல்ல பழக்கவழக்கங்கள் உள்ளன. எனவே, நம்பிக்கையோடு இருங்கள், முன்னேறுங்கள். பல்நோக்குப் பணிகளை செய்வதற்கான உங்களது திறன் இன்று பெரிதும் பயன்படும். மேலும், அதற்காக நீங்கள் பாராட்டப்படுவீர்கள்.
துலாம் ராசிபலன்
இன்று, உங்களது மனதில் நிறைய விஷயங்கள் நிறைந்துள்ளன. நிறைய விஷயங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, உங்களது கவனம் உடனடியாக தேவைப்படும் விஷயங்களில், உங்கள் ஆற்றலை மையப்படுத்தத் தெரிவு செய்யுங்கள். இன்று, உங்களது குறும்புத்தனமான செயல்களிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. ஆகவே, இன்று, ஏதாவது ஒன்றை சற்று வேகமாக எடுக்க நீங்கள் ஆசைப்பட்டாலும் கூட, அதை செய்ய வேண்டாம். அனைத்தும் உங்களுக்கு செலவு வைத்துவிடும். அவசரகதியில் வார்த்தைகளை கொட்டித் தீர்ப்பதையும், மனக்கிளர்ச்சியால் எடுக்கும் முடிவுகளையும் தவிருங்கள்.
விருச்சிகம் ராசிபலன்
நடந்தது நடந்து விட்டது. நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறுகளைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள். அவற்றிலிருந்து கற்றுக்கொள்வதற்கு தயாராக இருங்கள். உங்கள் அழகும், சாதுர்யமும் நீண்ட காலத்திற்கு உங்களுக்கு கைகொடுக்காது. உங்கள் செயல்பாடுகள் தான் உங்களைப் பற்றி வெளிப்படுத்தும். சிறிதுகாலம் ஆனாலும், உங்களது நிலையான கடின உழைப்பு உங்களுக்கு சிறந்த அங்கீகாரத்தைக் கொடுக்கும்.
தனுசு ராசிபலன்
நீங்கள் ஒரு பயணத்திற்குச் செல்ல நினைத்தால், வேறு எதையாவது யோசித்துப் பார்க்காதீர்கள். அன்றைய உங்களது நாள் மகிழ்ச்சியான மற்றும் நிறைவான தருணங்களால் நிரப்பப்பட வேண்டும். மேலும், அது உங்களுக்கு உண்மையிலேயே பயன்தரும். கவலையாக இருப்பதாக உணர்கிறீர்களா? உங்கள் உடல்நலம் தான் உங்களை அவ்வாறு உணரவைக்கிறதா? அல்லது உங்களின் இதயத்தின் ஆழத்தில் மறைந்திருக்கும் ஏதேனும் ஒன்று உங்களை அவ்வாறு உணரவைக்கிறதா? உங்களது உடல்நலப் பிரச்சினைகள் உங்களை கவலையடையச் செய்தால், விரைவில் மருத்துவ உதவியை நாட முயற்சி செய்யுங்கள்.
மகரம் ராசிபலன்
இன்று, உங்களது அன்பிற்குரியவர்களும், அன்பான நண்பர்களும் உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டப் போகிறார்கள். அவர்கள் உங்களது பிரச்சினைகளிலிருந்து எதிர்பாராதவிதமான மகிழ்ச்சியைக் அளிக்கப் போகிறார்கள். இன்று, சமூக நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வெளியே செல்லும் சூழல்கள் ஏற்படக்கூடும். மேலும், இது ஓர் நல்ல உறவுப்பிணைப்பை உருவாக்க உதவும். கடந்த சிலநாட்களாக, உங்களது மனஅழுத்தம் நிறைந்த வேலை தொடர்பான எல்லா விஷயங்களிலிருந்து இது ஒரு வரவேற்கத்தக்க மாற்றமாக நிகழும். இன்று, உங்களைப் நீங்களே நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். அதற்காக நீங்கள் எவ்வித வருத்தமும் பட வேண்டாம். சில நேரங்களில், இது உங்களுக்கு தேவைப்படுகிறது. இதை இன்று முயற்சி செய்யுங்கள்!
கும்பம் ராசிபலன்
இன்று மென்மையான மனதுடன் நடந்து கொள்வதுடன் மகிழ்ச்சியாக இருப்பதைத் தேர்வு செய்யுங்கள். எதிர்மறை எண்ணங்கள் இன்று உங்கள் மனதையும் இதயத்தையும் கடுமையாகப் பாதித்து விடக்கூடாது. இன்று மிகவும் பயனுள்ள விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். இதனால், நீங்கள் செய்ய நிறைய விஷயங்கள் கிடைத்திருக்கும். உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில் நீங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் இயல்பான திறன்கள் மற்றும் திறமைகளைப் பற்றிப் பாராட்டு கிடைக்கச் செய்யும். புன்னகையுடன், நிதானமாக, புதிய யோசனைகளை மனதுடன் ஒன்றிணைக்க கற்றுக் கொள்ளுங்கள்.
மீனம் ராசிபலன்
உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து நல்ல விஷயங்களுக்கும், நல்ல மனிதர்களுக்கும், நன்றியுடன் இருங்கள். தேவைப்படுபவர்களிடம் பரிவு காட்ட மறக்காதீர்கள். நல்ல அதிர்வுகளுடன் இந்த நாளை ஏன் தொடங்கக்கூடாது? உங்கள் அன்புக்குரியவர்களுடன் ஒரு மாலை நேரத்தைத் திட்டமிடலாம். இன்று, அமைதியாக இருப்பது மற்றும் உங்கள் ஆத்ம தோழருடன் நேரத்தைச் செலவிடுவது உங்களுக்கு நிறைய அமைதியைத் தரும். உங்களை விரும்புபவர்களுடன் அன்புடன் இருக்க நீங்கள் விலை உயர்ந்த இடத்திற்குச் செல்ல தேவையில்லை என்பதற்கு இதுவே போதுமான சான்று. உங்களுடன் தொடர்பில் இல்லாத நண்பர் அல்லது நீங்கள் விரும்புபவரைத் தொடர்பு கொண்டு பேசுங்கள். இது நிச்சயமாக அவர்களின் முகத்தில் ஒரு புன்னகையை வரவழைக்கும்.
No comments