• Breaking News

    போதை பொருளுக்கான விழிப்புணர்வு உறுதிமொழி,மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு

     


    நாகப்பட்டினம் தூய அந்தோணியர் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் பள்ளி மாணவ-மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இன்று (11.08.2023) எடுத்துக்கொண்டனர். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஷ் சிங் பங்கேற்பு. 


    மாவட்ட ஆட்சியர்  தெரிவித்ததாவது:


    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின்  அறிவிப்பின்படி இன்று முதல் ஒருவார காலத்திற்கு போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் தொடக்கமாக அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுக்க ஆணையிடப்பட்டதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் தூய அந்தோணியர் மேல்நிலைப்பள்ளியில் "போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன்" என்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை பள்ளி மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள் என அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

    மேலும் மாணவ, மாணவிகள் தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும் போதைப்பொருள்கள், மதுபழக்கங்களுக்கு எதிராக இருக்க வேண்டும். புகையிலை, குட்கா, பான் மசாலா போன்ற அனைத்து தீங்கு விளைவிக்கும் போதைப்பொருள்களை பயன்படுத்தக்கூடாது. நாடு வளர்ச்சி அடைவதில் முழு பங்கு மாணவ மாணவிகளிடம் தான் உள்ளது அதனால் இந்த வயதில் நல்ல ஒழுக்கம், நல்ல பழக்கம், நல்ல மரியாதை இவையனைத்திலும் சிறப்பாக இருந்து நன்றாக படித்து வாழக்கையில் நல்ல இடத்திற்கு வர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்தார்.

    இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  எம்.கே.சி. சுபாஷினி  துணை காவல் கண்காணிப்பாளர்  பிலிப் கென்னடி, தூய அந்தோணியர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜான் விக்டர், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


    நாகை மாவட்ட நிருபர் க. சக்கரவர்த்தி 

    97 88 34 18 34

    No comments