சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: டாஸ்மாக் நிர்வாகம்
நாடு முழுவதும் வரும் 15-ம் தேதி (செவ்வாய்கிழமை) 77வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சுதந்திர தினத்தன்று மாநிலத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. உத்தரவை மீறி டாஸ்மாக் கடையை திறந்து வைக்கும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments