• Breaking News

    கலப்புத் திருமணம் செய்த காதல் ஜோடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம்


    கலப்புத் திருமணம் செய்த காதல் ஜோடிகளை கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நபர்களால் வேதனை அடைந்த குடும்பத்தினர் கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.


    கரூர் மாவட்டம் வேங்கப்பட்டி புதூர் சார்ந்தவர் புவனேஸ்வரி ,கடவூர் வட்டம் முள்ளிப்பட்டியை சேர்ந்த ரங்கசாமி மகன் சுந்தர பாண்டி இவர் அதே ஊரில் கோவில் பூசாரி ஆக உள்ளார். இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் சிறிது காலத்தில் நட்பு காதலாக மலர இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி காதலர்கள் இருவரும் கலப்புத் திருமணம் செய்து கொண்டனர்.



     இவர்களின் திருமணத்தை இரு  குடும்பத்தாரும் முதலில் ஏற்று கொள்ளாத நிலையில் காதலர்கள் இருவரும் இந்து முறைப்படி குளித்தலை கடம்பர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு அன்றைய தினமே சென்னை சென்று விட்டனர். இதை அறிந்த சுந்தரபாண்டியன் குடும்பத்தினரும் ஊர் காரர்களும் அவர்கள் இருவரையும் கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக கூறி ஒதுக்கி வைத்துள்ளனர்.

     சுந்தரபாண்டியன் மனைவி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த பெண்ணை விட்டு விட்டு வந்தால் ஊரோடு ஒட்டி வாழலாம் என்றும் இல்லையென்றால் அவர்கள் குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக கூறி மிரட்டி உள்ளனர். இதற்கு அடிபணியாத காதல் ஜோடிகள் இருவரும் இறந்துவிட்டார்கள் என்று கூறி உயிரோடு இருக்கும் இவர்களுக்கு மாயனூர் காவிரி ஆற்றங்கரையில் ஈமச்சடங்கு செய்துள்ளனர். 



    நண்பர்கள் மூலம் இதை அறிந்த காதல் ஜோடிகள் ஊரில் உள்ள முக்கியஸ்தர்களிடம் இதைப் பற்றி முறையிட்டுள்ளனர்.இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் சுந்தரபாண்டியனை அடித்து துன்புறுத்தியாக கூறப்படுகிறது. மேலும் ஊருக்குள் அவர்கள் இருந்தால் அவர்கள் இருவரையும் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளனர் இதனால் காதல் ஜோடி இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டி கரூர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் தங்களை கட்டப்பஞ்சத்தை செய்து கொலை மிரட்டல் விடுத்த ஊர் முக்கியஸ்தர்கள் முள்ளிப்பட்டியை சார்ந்த பெருமாள், செந்தில்குமார், அண்ணாதுரை. ஆகியோர் மீது கட்டப்பஞ்சாயத்து செய்தும் கொலை மிரட்டல் வெடித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்து தஞ்சம் புகுந்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


    கரூர் மோகன் ராஜ்

    No comments