மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கு நூதன முறையில் திருச்செங்கோட்டில் விளம்பரம்
மதுரையில் வரும் 20ஆம் தேதி நடக்கவுள்ள அதிமுக மாநாட்டில் பெரும் திரளாக மக்களை திரட்ட அதிமுக முடிவு செய்துள்ளது எனவே மாநாடு குறித்த வரவேற்பு விளம்பரங்களை பல வகையிலும் செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஆட்டோக்கள் மற்றும் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஆக ஓட்டும் பணி முன்னாள் மின்துறை அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பொன் சரஸ்வதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வரும் இருபதாம் தேதி மதுரையில் அதிமுக சார்பில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் மாநாட்டிற்கு பெரும் திரளாக அனைவரையும் வருக வருக என வரவேற்கும் நிகழ்வாக பல்வேறு விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி அதன் மூலம் வரவேற்பு அழைப்பு கொடுக்கும் நிகழ்ச்சி திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே நடந்தது நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் மின்துறை அமைச்சரும் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான தங்கமணி கலந்து கொண்டு ஆட்டோ கார் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றில் மாநாடு வரவேற்பு விளம்பரங்களை ஸ்டிக்கர்கள் ஆக ஓட்டினார்.
பின்னர் 50 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காக்கி சீருடைகள் வழங்கினார், நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் பொன். சரஸ்வதி,அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் இரா.முருகேசன்,அதிமுக நகரச் செயலாளரும் நகர்மன்ற உறுப்பினருமான அங்கமுத்து,நகர அம்மா பேரவை செயலாளர் நகர்மன்ற உறுப்பினர் கார்த்திகேயன், தெற்கு ஒன்றிய செயலாளர் அணி மூர் மோகன், நகர துணை செயலாளர் நகர்மன்ற உறுப்பினர் ராஜவேல், நகர்மன்ற உறுப்பினர் மல்லிகா, நகர வங்கி தலைவர் ராமமூர்த்தி, உள்ளிட்ட கட்சியின் முன்னணி பிரமுகர்கள் நகர நிர்வாகிகள் மகளிர் அணி சார்பு அணி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஜெ.ஜெயக்குமார் 9942512340 திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம்
No comments