• Breaking News

    மூக்கு தண்டு உடைந்த மாணவனுக்கு தமிழ்நாடு நுகர்வோர் பேரமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் நிவாரணம்

     


    நாகப்பட்டினம் மாவட்டம் தாமரைக் குளம் மேல்கரை பகுதியில் வசித்து வரும் நந்தினிதேவி மகன் ருத்ரேஸ்வரன் வயது (12) தனியார் உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.  கடந்த (14/08/2023) அன்று ஏழாம் வகுப்பு படிக்கும் சக மூன்று  மாணவர்கள் தாக்கியதால் மூக்கில் உள்ள எலும்பு முழுவதும் உடைந்து ரத்தம் கொட்டியது. சம்பவம் அறிந்து ருத்ரேஸ்வரனின் தாயார் தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை மேற்கொண்டார்.ஒரு வாரம் சிகிச்சை முடிந்த நிலையில் கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தை கண்டு அதிர்ந்து போனார். பிறகு தமிழ்நாடு நுகர்வோர் பேரமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் நுகர்வோர் பேரமைப்பின் காவலர் மனித உரிமை போராளி செ.பால் பர்ண பாஸ் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினரும், நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான பி. வெண்ணிலாவை தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக பேசினார்.பிறகு மூக்கு தண்டு உடைந்த மாணவனுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் நாகை மாவட்ட செயலாளர் ஜெ. சேகர், மாவட்ட துணை செயலாளர் ஆர். பிரகாஷ் உடன் இருந்தனர் 


    நாகை மாவட்ட நிருபர் க.சிகாகோ

    No comments