• Breaking News

    கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி வெள்ள நீர்வீழ்ச்சியாக மாறியது.....

     


    தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று காலை முதல் மிதமான வெப்பம் நிலவிய நிலையில் மாலை வேளையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது.

    குறிப்பாக அப்சர் வேட்டரி, அண்ணா சாலை, மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, செண்பகனூர், உகார்த்தே நகர் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் கன மழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. இதன் காரணமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மலைப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தால் வெள்ளி நீர் வீழ்ச்சி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் மழையில் நனைந்த படியே ஒரு சில சுற்றுலாப்பயணிகள் அருவியை கண்டு ரசித்தனர்.

    No comments