அரசூர் ஊராட்சி குள்ளம் பாளையத்தில் சிறுபாலம் அமைக்கும் பணிகளை ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆய்வு செய்தார்
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர் ஊராட்சி, குள்ளம்பாளையம். கோவிலூரில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.49.35. இலட்சம் மதிப்பில் சிறுபாலம் (MINOR BRIDGE ) அமைக்கும் பணிகளை சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி தெற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர். கே.சி.பி. இளங்கோ ஆய்வு செய்தார். மேலும் இவர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் சு. பிரேம்குமார் (கி.ஊ.) , வட்டார வளர்ச்சி அலுவலர் அ.அப்துல்வகாப் , அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.மலர்விழி சரவணக்குமார், துணைத் தலைவர் கே.பி.சரவணக்குமார், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.ராஜம்மாள் , ஒன்றிய துணைச்செயலாளர், டி.பி.அசோகன் மற்றும் வார்டு உறுப்பினர் , திமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
9965162471.
No comments