• Breaking News

    பள்ளி மாணவ மாணவிகளின் கோரிக்கை உடனே நிறைவேற்ற உறுதியளித்த சட்டமன்ற உறுப்பினர்


    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புலியூர் ராணி மெய்யம்மை மேல் நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. சிவகாமசுந்தரி பங்கேற்று வழங்கினார்.

    கரூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும்  பள்ளியில் இன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. சிவகாமசுந்தரி தமிழக அரசு பள்ளி மாணவ மாணவியரின் நலன் கருத்தில் கொண்டு விலையில்லா மிதிவண்டிகளை மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படுத்தி வருகிறது இதன் அடிப்படையில் கரூர் அருகே உள்ள புலியூரில் அரசு உதவி பெறும் பள்ளி ராணி மெய்யம்மை மேல் நிலைப் பள்ளியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. சிவகாமசுந்தரி அவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

     மேலும் பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும் மாணவ மாணவிகளின் சார்பிலும் வெகு தூரத்தில் இருந்து வரும் மாணவ மாணவிகளின் கால நேரத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்கு பயலும் மாணவ மாணவிகளுக்கு சரியான நேரத்தில் பேருந்து வசதிகள் கிடைக்கப்பெறுவதில்லை என்ற கோரிக்கை முன்வைத்தனர். இதனை கேட்டுக் கொண்ட கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. சிவகாமசுந்தரி அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இதற்கு உடனடியாக கூடிய விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.


    கரூர் மோகன் ராஜ்

    No comments