அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிப்பட்டியில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்தார்
ஈரோடுமாவட்டம், கொடிவேரி பாசனத்திற்குட்பட்ட தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசன பகுதியில் நெல், கரும்பு, வாழை, என 24 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயிகள் நெல் சாகுபடிக்கான பணிகளை தொடங்கி செய்து வந்தனர்.
இதனைடுத்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதியில் நெல் அறுவடைக்கு தயாராகி விவசாயிகள் கடந்த இரண்டு நாட்களாக அறுவடை பணிகளை தொடங்கி உள்ளனர் .
இந்நிலையில் விவசாயிகள் பாசன பகுதியிகளில் நெல் அறுவடை பணிகளை தொடங்கியதால் விவசாயிகள் நேரடியாக நெல்லை கொள்முதல் செய்யும் வகையில் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், நஞ்சைபுளியம்பட்டி, துறையம்பாளையம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த்து .
அதனடிப்படையில் அந்தியூர் சட்டமன்ற தொகுதி கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு பாசன விவசாயிகள் முன்னிலையில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.
அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் விவசாயிகள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நெல்லை கொள்முதல் செய்யும் வகையில் பயோமெட்ரிக்முறை அறிமுக படுத்தபட்டுள்ளது.
பின்னர் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தெரிவிக்கையில் விவசாயிகளின் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழை பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க அனைத்து பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்காமல் இருக்கவும் நெல்லை காலதாமதம் இன்றி கொள்முதல் செய்ய வேண்டும், கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகள் தேங்காமால் இருக்க கூடுதல் லாரிகளை இயக்க வேண்டும் என நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தூ.நா.பாளையம் ஒன்றிய கழக செயலாளர் எம்.சிவபாலன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம்
சிவன் மூர்த்தி 9965162471.
No comments