• Breaking News

    ஹரியானா மாநிலத்தில் இந்த மாதம் முழுவதும் இணையசேவை துண்டிப்பு

     


    சில வாரங்களுக்கு முன்னர் ஹரியானா மாநிலம், நுஹ் மாவட்டத்தில் இந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தை ஒரு பிரிவினர் தடுத்ததால் அங்கு வன்முறை சம்பவங்கள் நேர்ந்தன. இதனால் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சமபவத்தின் எதிரொலி டெல்லி வரை சென்றது. அங்கும், சில இடங்களில் போராட்டங்கள் துவங்கின.


    இதனை தொடர்ந்து அந்தந்த மாநில காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வன்முறையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் வன்முறை சம்பவங்கள் மற்ற இடங்களில் பரவாமல் இருக்க அப்போது, இன்டர்நெட், மற்ற தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தன.


    இந்நிலையில் மற்ற மாவட்டங்களில் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், ஹரியானா நுஹ் மாவட்டத்தில் இன்னும் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஏற்கனேவே 11ஆம் தேதி வரை இருந்த இன்டர்நெட் , மெசேஜ் தடை தற்போது ஆகஸ்ட் மாத இறுதி வரையில் தொடர்வதாக ஹரியானாவின் உள்துறைச் செயலாளர் அறிவித்துள்ளார்.


    சட்டம் ஒழுங்கு நிலைமையை மறுபரிசீலனை செய்துள்ளதாகவும், மாவட்டத்தில் இன்னும் நெருக்கடியான மற்றும் பதட்டமான சூழ்நிலைகள் இருப்பதாகவும் துணை ஆணையர் நூஹ் என் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். என்றும் ஹரியானாவின் உள்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.


    இணையச் சேவைகளைத் தவறாகப் பயன்படுத்துவதன் காரணமாக, நுஹ் மாவட்டத்தில் பொதுப் பயன்பாடுகள், பொதுச் சொத்துக்களுக்கான சேதம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். எனவே, மொபைல் இன்டர்நெட் சேவை, எஸ்எம்எஸ் சேவைகள் மற்றும் பிற தகவல் பரிமாற்ற சேவைகள் மூலம் தவறான வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்கவே இம்மாதம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது என ஹரியானா உள்துறை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

    No comments