• Breaking News

    திருமணஞ்சேரி ஸ்ரீ கல்யாண மாரியம்மன் ஆலய முதலாம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது


    மயிலாடுதுறை மாவட்டம்  திருமணஞ்சேரி கிராமம் கீழத்தெருவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கல்யாண மாரியம்மன் ஆலயம் முதலாம் ஆண்டு பால்குட  திருவிழா நடைபெற்றது. முன்னதாக விக்ரமன் ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் பால்குடங்களுடன் அழகு காவடி,அலங்கார காவடிகள் பம்பை மேளம்,மேளதாள வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.



    அதனை தொடர்ந்து அம்மனுக்கு108 பால்குட அபிஷேக ஆராதனையும் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை கிராமவாசிகள் நாட்டாமைகள் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மகளிர் சுய உதவி குழுக்கள் கீழத்தெரு வாசிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

    No comments