முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ராசிபுரம்-வநேத்ரா முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விலங்கியல் துறை சார்பாக, மானாமதுரையைச் சேர்ந்த அக்வாக்ரி பிராஸஸிங் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்நிகழ்ச்சி அண்மையில் மானாமதுரையில் நடைபெற்றது.
இத்தொழிற்சாலையானது 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மேலும், இந்திய விவசாயிகள் உர கூட்டமைப்பு நிறுவனம் மற்றும் மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் வழிகாட்டுதலோடு கடல் பாசிகளை மூலப்பொருட்களாகக் கொண்டு உணவுத்துறை சார்ந்த பொருட்கள் மற்றும் விவசாய உயிர் உரங்கள் ஆகியவற்றை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். இத்தொழிற்சாலையின் சார்பில் அதன் பொது மேலாளரும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை தலைவருமான முனைவர் ஜித்தேந்திர குமார் சிங் அவர்களும், கல்லூரியின் சார்பாக, முதல்வர் முனைவர் எஸ்.பி.விஜய்குமார், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் புலமுதன்மையர் முனைவர் ந.சுதாகர் மற்றும் விலங்கியல் துறைத்தலைவர் முனைவர் த.சுகன்யா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக கல்லூரி மாணவர்கள் கற்றலோடு இணைந்து தொழில்நுட்பம் சார்ந்த அறிவு, கள ஆய்வு பயிற்சி, சிறப்பு விரிவுரையாளர் உரை மற்றும் பாடம் சார்ந்த சந்தேக நிவர்த்தி ஆகியவற்றை பெறுவர்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கல்லூரியின் விலங்கியல் துறை மாணவர்களும், உதவிப் பேராசிரியர்களும் தொழிற்சாலையில் களப்பயணம் மேற்கொண்டு கடல்பாசியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மதிப்புக் கூட்டு பொருட்களை பற்றி தெரிந்து கொண்டனர்.
ஜெ.ஜெயக்குமார் 9942512340
நாமக்கல் மாவட்டம்.
No comments