சின்ன ஓம் காளியம்மன் கோவிலில் வளையல் அலங்காரம்
திருச்செங்கோடு சின்ன ஓம் காளியம்மன் கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அம்மன் புடவை அலங்காரம் பணம் மற்றும் பழ அலங்காரம் மஞ்சள் கயிறு அலங்காரம் என நான்கு வாரங்களும் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மாதத்தின் கடைசி வெள்ளியான இன்று சின்ன ஓம் காளி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பெண் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பலர் சாமிக்கு அர்ச்சனை செய்ய கொண்டு வந்த பொருட்களுடன் வளையல் கொண்டு வந்தனர். அம்மனை வழிபட வந்த பக்தர்களுக்கு கூழ், மற்றும் சிற்றன்னங்கள் வழங்கப்பட்டது.
ஜெ.ஜெயக்குமார் 99425 12340
நாமக்கல் மாவட்டம்
No comments