• Breaking News

    அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆய்வு செய்ய வேண்டும்; மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு

     


    தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களுக்கு உரிய மருத்துவ சேவை வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளனரா என ஆய்வு செய்யவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடு, மருத்துவ சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யவும் மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    No comments