• Breaking News

    ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் நீக்கம்: ஓபிஎஸ் அறிவிப்பு

     


    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் (ஓபிஎஸ் அணி) அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், ஓபிஎஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.


    கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் விலகியவர்கள், அதுவும் ஓபிஎஸ் பக்கம் இருந்த பலர் இபிஎஸ் பக்கம் ஒவ்வொருவராக சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், தற்போது, இபிஎஸ் அணியில் மீண்டும் இணைய போவதாவாக தகவல் வெளியான நிலையில், ஓபிஎஸ் தரப்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோகன் நீக்கப்பட்டார்.

    No comments