• Breaking News

    புதிய வழித்தட பதாகைகள் அமைப்பு


    நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பாக திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் வழித்தட பதாகைகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.



     இதன் துவக்க விழாவாக  புதிய பேருந்து நிலையம் ரவுண்டான அருகில் இருக்கும் வழித்தட பதாகையை நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு அவர்கள், நகர காவல் ஆய்வாளர் மகேந்திரன் அவர்கள், நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை தலைவர் PRD பரந்தாமன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.



     இந்நிகழ்வில் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை நிர்வாகிகள், காவல்துறை  துணை ஆய்வாளர்கள், போக்குவரத்து காவலர்கள்,பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும்  பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



    ஜெ.ஜெயக்குமார் 9942512340 

    நாமக்கல் மாவட்டம்

    No comments