• Breaking News

    அரசூர் ஊராட்சி குள்ளம் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் துவக்கி வைத்தார்


    ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ,  அரசூர் ஊராட்சி குள்ளம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்   தமிழ்நாடு முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி தெற்கு  தி.மு.க. ஒன்றிய செயலாளர். கே.சி.பி. இளங்கோ  தொடங்கி வைத்தார். மேலும் இவர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் சு. பிரேம்குமார் (கி. ஊ), வட்டார வளர்ச்சி அலுவலர் அ.அப்துல் வகாப் , ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.ராஜம்மாள் ,  ஒன்றிய துணை செயலாளர் டி.பி.அசோகன், ஊராட்சி மன்ற தலைவர்எஸ்.மலர்விழி, ஊராட்சி மன்ற துணை தலைவர் கே.பி.சரவண குமார், தலைமை ஆசிரியர், மற்றும் காலை சிற்றுண்டி அமைப்பாளர்கள், திமுக உறுப்பினர்கள், சிதம்பரம் , செல்வி, பொன்னுச்சாமி, கீதா, ரமேஷ், ராஜாமணி, மற்றும் இளைஞரணி அமைப்பாளர்  சந்தோஷ்குமார்,  கோவிந்தராஜ் மற்றும் மாணவ, மாணவிகள்  கலந்துகொண்டனர்.

    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி 9965162471

    No comments