திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குமரேசனும்(23) தர்ஷினி(19) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இதில் தர்ஷினி அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் நேற்று வீட்டை விட்டு வெளியேறி எலவம்பட்டி பகுதியில் இருக்கும் முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் காதலர்கள் பாதுகாப்பு கேட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் இரு வீட்டு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பிறகு காதலர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
0 Comments