• Breaking News

    கரூரில் கார் மோதிய விபத்தில்,சத்துணவு பெண் அமைப்பாளர் சம்பவ இடத்திலேயே பலி


    கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மலர்க்கொடி(42),இவர் கரூர் மாநகர் காந்திகிராமம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகவும்,வாங்கல் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் இன்று காலையில் கரூர் காந்திகிராம் பகுதியில் உள்ள பள்ளியில் சென்று பணியை பார்வையிட்டு தொடர்ந்து வாங்கல் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு செல்ல கரூர்- வாங்கல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அரசு காலணி அடுத்து நரிக்குறவர் காலனியை கடந்து சென்று கொண்டிருந்தபோது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி எதிரே வந்த கார்,மலர்கொடி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி, தரதரவென இழுத்துச் சென்று அருகில் இருந்த மளிகை கடைக்கு சுவற்றில் முட்டி நின்றது,இதில் தலையில் படுகாயம் அடைந்த மலர் கொடி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

    மலர்கொடி

    இது குறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீசார் சம்பவ இடத்தில் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    விபத்து நடத்திய கார்ஓட்டுநர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    கரூர் மாவட்டம்

    மோகன் ராஜ்

    No comments