• Breaking News

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.....

     


    நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி, விழுந்தமாவடி, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்காடு உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

    ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்வது, விரட்டியடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதைப்போல இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்கிறார்கள்.

    இந்தநிலையில் 2-வது நாளாக நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கி உள்ளனர். வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்த வைத்திய நாதசுவாமி, ராமராஜன், செல்வராஜ் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    20 லிட்டர் டீசலையும் எடுத்து சென்றனர். மீனவர்கள் படகில் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, பேட்டரி செல்போன் உள்ளிட்ட பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.

    No comments