• Breaking News

    பெங்களூரு போலீஸ் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு... தமிழக வாலிபருக்கு ஜெயில்......

     பெங்களூரு போலீஸ் பெயரில் போலி X (ட்விட்டர்) கணக்கை உருவாக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

    கர்நாடகா மாநிலம், பெங்களூரு போலீஸ் பெயரில் @BlrCityPolicee என்ற X (ட்விட்டர்) போலி கணக்கு மர்மநபரால் திடீரென உருவாக்கப்பட்டது. இதைக் கண்ட பெங்களூரு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக பெங்களூருவில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஏப்.28-ம் தேதி வழக்குப்பதிவு செய்ப்பட்டது.

    அத்துடன் சிசிபி அதிகாரிகள் சிறப்புக்குழுவை அமைத்து விசாரணை நடத்தினர். அப்போது இந்த போலி கணக்கை வைத்து காவல்துறையின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பதிவுகள் இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்சசியடைந்தனர்.

    இந்த கணக்கை உருவாக்கியவர் தமிழகத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பது தெரிய வந்தது. அவரை போலீஸார் இன்று கைது செய்தனர். அவர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66சி (அடையாளத் திருட்டுக்கான தண்டனை) மற்றும் 66டி (கணினி வளத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் மோசடி செய்ததற்கான தண்டனை) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 419 (நபர் மூலம் மோசடி செய்ததற்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments