மழைநீர் வடிகால்கள் உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி நகர்மன்ற தலைவர் ஆய்வு
திருச்செங்கோடு முதல் பள்ளிபாளையம் வரை சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது இதில் மழைநீர் வடிகால்கள் உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால் சாலையின் இரு புறமும் உள்ள தெருக்களுக்குள் கார்கள் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது வணிக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் புகார் கொடுத்ததை அடுத்து நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு நகராட்சி ஆணையாளர் சேகர் ஆகியோர் கூட்டப்பள்ளி எல் சாலை பகுதியில் நேரில் ஆய்வு உயரமாக இருக்கும் இடங்களை கண்டறிந்து சாலை மட்டத்திற்கு மழை நீர் வடிகால்களை அமைக்க நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் தமிழரசியிடம் வலியுறுத்தல்.
திருச்செங்கோடு முதல் பள்ளிபாளையம் எஸ்பிபி காலனி வரை நான்கு வழிச்சாலையாக மாற்ற சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது இந்த சாலை அமைக்கும் போது முன்கூட்டி திட்டமிடாமல் வீடுகள் தெருக்கள் வணிக நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் மழை நீர் வடிகல்களை சாலை மட்டத்திலிருந்து சுமார் 1 1/2 அடி உயரத்திற்கு அமைத்து இருப்பதால் தெருகளுக்குள் கார்களில் இரு சக்கர வாகனங்களில் வணிக நிறுவனங்களுக்கு வருபவர்கள் கடைகளுக்குள் செல்ல முடியாமல் அவதி ப்பட்டு வந்தனர் இது குறித்து திருச்செங்கோடு ஊட்டப்பள்ளி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது பகுதியில் எல் சாலை அமைந்துள்ள இடத்தில் நகராட்சி சாலை 50 அடி இருந்தும் 20 அடிக்கு மட்டுமே சாலை மட்டத்திற்கு வாகனங்கள் செல்லும் வழி விடப்பட்டுள்ளது அந்த சாலையில் லாரிகள் ரிக்வண்டிகள் கார்கள் செல்ல இது இடையூறாக இருப்பதாகவும் 50 அடி சாலை முழுவதும் சாலை மட்டத்திற்கு வாகனங்கள் செல்லும் வகையில் செய்து தர வேண்டும் என நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு உடன் புகார் அளித்திருந்தனர்.
இதன் அடிப்படையில் திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நடுநி சுரேஷ் பாபு ஆணையாளர் சேகர் நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் தமிழரசி ஆகியோர் என்ற அந்த பகுதிக்கு ஆய்வுக்கு சென்றனர்.சாலை கார்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதாக நெடுஞ்சாலை துறை அதிகாரி தமிழரசி கூறினார் ஆனால் நகராட்சி சாலை 50 அடி இருந்தும் 20 அடிக்கு மட்டுமே சாலை மட்டத்திற்கு வாகனங்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இதே போல் சாலை விரிவாக்க பணிகள் நடக்கும் பல பகுதிகளில் இந்த இடைஞ்சல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே எந்தெந்த இடங்களில் இது போல் அமைந்துள்ளதோ அந்த இடத்தில் மழை நீர் வடிகாலின் உயரத்தை குறைத்து வாகனங்கள் செல்ல ஏதுவாக அமைத்து தர வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் தமிழரசி இடம் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு நகராட்சி ஆணையாளர் சேகர் ஆகியோர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.
ஏற்கனவே அமைக்கப்பட்டு இதன் அளவுகள் நெடுஞ்சாலை துறையில் கொடுக்கப்பட்டுள்ளதால் உடனடியாக எதுவும் செய்ய முடியாது எனவும் உயர்மட்ட அதிகாரிகள் வரை இதை கவனத்திற்கு கொண்டு சென்று அமைத்து தர ஆவண செய்வதாகவும் உதவி செயற்பொறியாளர் தமிழரசி உறுதி அளித்தார் ஆய்வின்போது நகர் மன்ற உறுப்பினர்கள் பலரும் உடன் இருந்தனர்.
ஜெ.ஜெயக்குமார் 9942512340
நாமக்கல் மாவட்டம்
No comments