குடும்பத்தை விட்டு சுனாமி என்ற கள்ளக்காதலில் அடித்து செல்லப்பட்ட போலீசார்....
இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியை ஏமாற்றி விட்டு கள்ளக்காதலி உடன் உல்லாசமாக இருந்து வரும் போலீசார். காதலியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து கொடுமைப்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க பெண் புகார்.
தன்னை ஏமாற்றும் கணவர் ஒரு போலீஸ் என்பதால் காவல்துறை அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவ தோடு, ஆதரவற்று நிற்கதியாய் நிற்கும் தன்னை மிரட்டி வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டு.
தனக்கும், தனது குழந்தைகளுக்கும் நியாயம் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என கதறும் பெண்ணால் கரூரில் பரபரப்பு .
கரூர் காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் லதா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் திருமணமான இரண்டு வருடங்களில் கணவர் சரவணனுக்கு போலீஸ் வேலை கிடைத்துள்ளது. காவலர் பயிற்சி முடிந்ததும், அவர் திருச்சியில் உள்ள ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில்,மணப்பாறையில் வசித்து வரும் சுபாஷினி (45) என்ற பெண்ணுடன் சரவணனுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை சந்தோசமாக இருந்த சரவணன் குடும்ப வாழ்வில் கள்ளக்காதல் என்ற சுனாமி புயல் வீசத் தொடங்கியது. இதனால், மகிழ்ச்சியாக இருந்த இவர்கள் குடும்பம் இன்று சின்னாபின்னமாக மாறிவிட்டது.
நாளுக்கு நாள் சரவணன்- சுபாஷினியின் கள்ள உறவு உடும்பு பிடியாக மாறியது. இதனால், மனைவி லதா மற்றும் குழந்தைகளை ஏமாற்றி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக சுபாஷினியிடம் முழுமையாக அடைக்கலமாகி விட்டார் சரவணன்.
இந்த நிலையில், கணவர் சரவணன் மற்றும் கள்ளக்காதலி சுபாஷினியிடம் வாழ்க்கை பிச்சை கேட்டு லதா போராடியுள்ளார். இவர்களை அடித்துவிரட்டாத குறையாய் துரத்தி விட்டனர்.
தனது இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்பட்டு லதா தனக்கு நியாயம் கேட்டு கரூர் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் கணவனை மீட்டுத் தர கோரி 3 மாதங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார்.
வாழ்க்கையை சீரழித்த தனது கணவர் சரவணன் ஒரு போலீஸ் என்பதால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியுள்ளனர். பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நியாயம் கேட்டு இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லதா புகார் அளித்துள்ளார்.
மேலும் கள்ளக்காதலி சுபாஷினி தூண்டுதலின் பேரில் குடிபோதையில் சரவணன் தன்னை அடித்து துன்புறுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தனக்கும், தனது குழந்தைகளுக்கும் நியாயம் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என கதறும் பெண்ணால் கரூரில் பரபரப்பு .
கரூர் மோகன் ராஜ்
No comments