• Breaking News

    நாகை மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

     


    தமிழ் வளர்ச்சித் துறை - செய்திக் குறிப்பு


    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2023ஆம் ஆண்டில் அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டமாக 16.08.2023,17.08.2023 ஆகிய நாள்களில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பயிலக்கூடிய கல்லுாரி மாணவர்களுக்கு நாகப்பட்டினம், பொரவச்சேரி, ஆண்டவர் செவிலியர் கல்லூரியில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன. பிற்பகல் 02.00 மணிக்கு தொடங்கப்பெறும். அப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/- என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன. கல்லூரிப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் கல்லுாரிகளின் முதல்வர்கள் வழியாக adtd.nagai@gmail.com என்ற மின்னஞ்சல்


    முகவரிக்கு 14.08.2023-இக்குள் அனுப்பி வைக்கவேண்டும். அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டிக்கு 1. பூனா உடன்படிக்கை, 2. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்,3. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், 4. அம்பேத்கரின் சாதனைகள், 5. அம்பேத்கர் எழுதிய நூல்கள், 6. அரசியல் சாசனத்தின் தலைமை சிற்பி, 7.அம்பேத்கரும் பௌத்தமும் ஆகிய தலைப்புகளிலும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் பேச்சுப்போட்டிக்கு 1. என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே, 2. அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், 3. சமத்துவபுரம், 4. திராவிடச் சூரியனே, 5. பூம்புகார், 6.நட்பு. எழுதுகோல், 9. 7. குறளோவியம், 8. கலைஞரின் அரசியல் வித்தகர் கலைஞர் ஆகிய தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளன.


    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்கள் இப்பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ்  தெரிவித்துள்ளார்.



    நாகை மாவட்ட நிருபர்

     க.சக்கரவர்த்தி

    9788341834

    No comments