• Breaking News

    தமிழ்நாடு இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் முன்னேற்ற சங்கம் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது


    கரூர் மாவட்ட இருசக்கர வாகனம் பழுது நீக்கும் தொழிலாளர்கள் சங்க மாநில கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வளர்ந்து வரும் காலகட்டத்தில் பொதுமக்களின் பயன்பாட்டில் இருசக்கர வாகனம் இன்றியமையாத ஒரு தேவையாக மாறிவிட்டது.

     மேலும் ஒவ்வொரு ஆண்டும் புது புது மாடல்களில் இரு சக்கர வாகனங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. அதன்படி தற்போது வரும் இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் பீ. எஸ்.6,& FUEL இன்ஜெக்டர் மற்றும் சென்சார் ஓ பி டி கேபிள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட இருசக்கர வாகனங்களாக இருக்கின்றது. தற்போது வரும் இருசக்கர வாகனங்கள் பெரும்பாலானவை சென்சார் அடிப்படையிலே வருவதால் இருசக்கர வாகன பழுது நீக்குபவர்களுக்கு பெரும் சவாலாகவே அமைந்துள்ளது.

     பொது மக்களின் பயன்பாட்டில் இருக்கும் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் இருசக்கர வாகனம் டீலர்களை தவிர்த்து வெளியில் இதற்காக பிரத்யோகமாக இருக்கும் இரு சக்கர வாகன பழுது நீக்குபவர்கள் பார்க்கப்படுகிறது புது மாடல்களில் வரும் புது உத்திகளை இருசக்கர வாகனம் பழுது நீக்குபவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கான பயிற்சி வகுப்பு கரூரில் தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது.



     இப்ப பயிற்சி மாநில பயிற்சி ஆசிரியர் இளஞ்சேரன் துவக்கி வைத்து பயிற்சி அளித்தார் மேலும் மாநில துணைச் செயலாளர் ஜெகதா குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்புகள் துவக்கி வைத்தார் இதில் கரூர் மாவட்ட தலைவர் k.பாலாஜி மாவட்ட செயலாளர் குமார் மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பழுது நீக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.


    கரூர் மோகன் ராஜ்

    No comments