• Breaking News

    சாலையோரத்தில் கட்டை பையில் கிடந்த குழந்தை....

     


    சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பகுதியில் சோபனா(39) என்பவர் வசித்து வருகிறார். இவர் மலையம்பாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை மொபட்டில் சோபனா வேலைக்கு சென்றார். இதனையடுத்து சோபனா தனது மொபட்டை நிறுத்திவிட்டு தான் வேலை பார்க்கும் நிறுவனத்திற்குள் செல்ல முயன்ற போது சாலையோரம் இருந்த கட்டைப்பையில் குழந்தை அழும் சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சோபனா அந்த பையை திறந்து பார்த்தபோது பிறந்து சில நாட்களே ஆன குழந்தை உயிருடன் இருப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பெண் குழந்தையை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து எழும்பூரில் இருக்கும் குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் குழந்தையை கட்டைப்பையில் வைத்து அங்கு வீசி சென்றவர்கள் யார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments