காவல்துறையின் அதிரடி சோதனையில் சிக்கியது 400 கிலோ கடத்தல் அரிசி
குடிமைப் பொருள் வளங்கள் குற்றப்புலனாய்வுத்துகாவல்துறை தலைமை இயக்குனர் வன்னிய பெருமாள் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில், திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் திருமதி சுஜாதா அவர்களது வழிகாட்டுதலின் பேரில்.
கரூர் மாவட்ட குடிமை பொருள் வளங்கள் குற்றப்புலனாய்வுத் துறையினர் காந்திகிராமம் to தொழிற்பேட்டை 4 ரோடு சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அப்போது சந்தேகத்து இடமாக வந்த அசோக் லேலண்ட் தோஸ்த் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய , வாகன ஓட்டுனர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் வாகனத்தை தணிக்கை செய்ய 8 மூட்டைகளில் தலா ஐம்பது கிலோ வீதம் 400 kg ரேஷன் அரிசி இருந்தது, அரிசி வைத்திருந்தமைக்கு உரிய ஆவணம் ஏதும் இல்லாததால் அரிசி கடத்திவரப்பட்ட வாகனத்தைம் அரிசி கடத்தலில் ஈடுபட்ட பாலப்பட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரை கைது செய்து, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் JM I அவர்கள் முன் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் கரூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
கரூர் மோகன் ராஜ்
No comments