சந்திரயான் 3-க்காக ஸ்ரீ சந்திரபகவானுக்கு விஷேச அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது
உலகமே உற்று நோக்கும் சந்திராயன் 3 விண்களம் தரையிரங்க உள்ளது. ஒரிரு மணித்துளிகளில் தரையிரங்க உள்ள சந்திராயன் 3 விண்களம் பத்திரமாக விண்ணில் தரையிரங்க வேண்டி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள கோவில்களில் விஷேச பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கரூரில் சந்திரபகவானுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தின் நவக்கிரஹ தெய்வங்களில் ஒன்றான ஸ்ரீ சந்திர பகவானுக்கு விஷேச அபிஷேகங்கள், பால், தயிர், இளநீர், சந்தனம்,திருநீர், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதற்கான முழு ஏற்பாடுகளை ஆலய ஸ்தானிக்கர் வசந்த் சர்மா சிறப்பாக செய்திருந்தார்.
கரூர். மோகன் ராஜ்
No comments