• Breaking News

    சந்திரயான் 3 வெற்றி கொண்டாட்டம்


    நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக தரையிரக்கப்பட்டதையடுத்து திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில் தேசிய சிந்தனை பேரவை சார்பில் இந்தியாவின் உருவப் படத்தை விளக்குகளால் அலங்கரித்துக் கொண்டாட்டம்.

    சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் மாலை 6.04 மணிக்கு தரையிக்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்தனர். இதனை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடினர். இதே போல் திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை சார்பில் அதன் தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் கைலாசநாதர் கோவிலில் இந்தியாவின் படம் வரைந்து அதனை விளக்குகளால்  அலங்கரித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.


    ஜெ.ஜெயக்குமார் 9942512340 

    நாமக்கல் மாவட்டம்


    No comments