• Breaking News

    இந்த மாதம் கூடுதலாக 2 லட்சம் டன் சர்க்கரை விற்க அனுமதி வழங்கியது மத்திய அரசு


     நடப்பு ஆகஸ்டு மாதம், சர்க்கரை ஆலைகள் 23 லட்சத்து 50 ஆயிரம் டன் சர்க்கரையை விற்பனைக்கு அனுப்ப மத்திய அரசு ஒதுக்கீடு நிர்ணயித்து இருந்தது. இந்நிலையில், அதைவிட கூடுதலாக 2 லட்சம் டன் சர்க்கரையை விற்பனைக்கு அனுப்ப சர்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியது. ஓணம், ரக்ஷா பந்தன், கிருஷ்ண ஜெயந்தி ஆகிய பண்டிகைகள் வருவதால், சர்க்கரையின் தேவை அதிகரிக்கும் என்பதால், அதன் விலையை கட்டுப்பாட்டில் வைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

    No comments