• Breaking News

    ஒரு லிங்க்... ரூ.17,00,000 ஆட்டையை போட்ட ஆன்லைன் மோசடி கும்பல்..... பொதுமக்களே உஷார்....

     


    அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு ஆன்லைன் மோசடியில் ஐடி ஊழியர் ஒருவர் 17 லட்ச ரூபாயை இழந்துள்ளார்.

    பிரபலமான ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் மும்பையை சேர்ந்த நபரிடம் பகுதி நேர வேலை தருவதாகக் கூறி மோசடி கும்பல் அணுகியுள்ளது. அவர் ஏற்கெனவே நன்றாக சம்பாதித்தாலும், பண ஆசையில் பகுதி நேர வேலை பார்க்க விரும்பியுள்ளார்.

    இந்நிலையில், ஹோட்டல் அறைகள் புக் செய்வது தொடர்பான பகுதி நேர வேலை இருப்பதாக கூறி இவரை ஒரு ஆணும், பெண்ணும் தொடர்பு கொண்டர். அதன்பின்னர் வேலைக்கான லிங்க்கை டெலிகிராம் செயலி மூலம் அனுப்பினர்.

    வேலையில் பதிவு செய்வதற்காக குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்று கேட்டுள்ளனர். அந்த நபரும் அவர்கள் கேட்ட தொகையை செலுத்தியுள்ளார். அதன்பின்னர் ஒவ்வொரு காரணமாக கூறி தொடர்ந்து பணம் பறித்துள்ளனர்.

    இந்த வேலையில் எளிதாக சம்பாதிக்கலாம் என்று கூறி, அவரிடம் ரூ.17 லட்சம் ஏமாற்றியுள்ளனர். ஒருகட்டத்தில் வருமானம் எதுவும் வரவில்லை என்று உஷாரான ஐடி ஊழியர், தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.

    அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வராததால், தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார். உடனடியாக காவல்நிலையத்திற்குச் சென்று இதுதொடர்பாக புகார் அளித்தார். ஆனால் தற்போது இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வருவதால், மோசடிக்காரர்களை பிடிப்பது மிகவும் சவாலான ஒன்று.

    அதனால் ஆன்லைன் மோசடியில் இருந்து காத்துக்கொள்ள நாம் விழிப்புடன் இருப்பது அவசியம். யாரும் குறைந்த வேலை கொடுத்து அதிக பணம் கொடுக்க மாட்டார்கள். இந்த சிம்பிளான லாஜிக்கை புரிந்து கொண்டு செயல்படுவது அவசியம்.

    No comments