• Breaking News

    இமாச்சலப் பிரதேசத்திற்கு நிவாரணப் பணிகளுக்காக ரூ.10 கோடி நிதி உதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

     


    இமாச்சல பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு நிலச்சரிவுகள் ஏற்பட்டு இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.ஏற்கனவே, இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் நிவாரண பணிகளுக்காக 10 கோடி ரூபாய் அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் வழங்கினார்.

    இந்நிலையில், தற்போது அவரை தொடர்ந்து கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில் ” இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த இயற்கை பேரிடர் காரணமாக அம்மாநில மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் ஏற்பட்ட கடும் சேதங்கள் மிகுந்த வருத்தத்திற்கும், வேதனைக்கும் ஆளாக்கியுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் பங்களிப்பாக இமாச்சல பிரதேச அரசுக்கு ரூபாய் 10 கோடி வழங்கப்படும் ” என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

    இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூபாய் 10 கோடி நிதி உதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.

    No comments