மருத்துவர்களின் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தையின் கை பறிபோயுள்ளது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள மாநில மாநாடு குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், அண்மையில், சென்னை எழும்பூர் அரசு அரசு மருத்துவமனையில் ராமநாதபுரத்தை சேந்த தஸ்தகீர் – அஜீஷா தம்பதியின் ஒன்றரை வயது மகனுக்கு ஒரு கை அகற்றப்பட்டது குறித்து பேசினார். அவர் கூறுகையில், தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மதுத்துவத்துறை சீரழிந்துவிட்டது என குறிப்பிட்டார்.
மேலும், மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் ஒன்றரை வயது குழந்தையின் கை பறிபோயுள்ளது என தமிழக மருத்துவத்துறை பற்றி விமர்சனம் செய்து இருந்தார் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி.
No comments