அனுமதியின்றி ஆபாச ஆடல்,பாடல் நிகழ்ச்சி நடத்திய ஊர் நாட்டாமைகள் கைது
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் உள்ள வீரமாகாளியம்மன் திருக்கோவில் திருவிழா கடந்த ஜூலை 1 ஆம் தேதி இரவு நடைபெற்றது. இதில் இரவு 10 மணிக்கு மேல் எவ்வித அனுமதியும் இன்றி காவல் உத்தரவை மீறி குறவன் குறத்தி என்ற ஆபாச கலை நிகழ்ச்சி கோவில் விழாக்கமிட்டி ஏற்பாட்டில் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆபாச குறவன் குறத்தி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஊர்நாட்டாமைகள் மற்றும் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
No comments