நடிகர் ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நாகப்பாம்பு குறித்த பதிவு
பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு உள்ளதாக பொருளாதார
குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, ஆர்.கே.சுரேஷ் தலைமறைவான நிலையில், அவரது லுக் அவுட் அனுப்பினர். இதனை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆர்.கே.சுரேஷை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நாகப்பாம்பு குறித்த பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதை பதிவிட்டு சில நிமிடங்களிலேயே அழித்தும் இருந்தார். இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் எங்கிருந்து அவர் செல்போன் இயக்கப்படுகிறது என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். இதனை அடுத்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆர்.கே.சுரேஷை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments