• Breaking News

    நடிகர் விஜய் சினிமாவிற்கு இடைவெளி எடுக்கப்போவதாக தகவல்

     


    அடுத்த 3 ஆண்டுகள் சினிமாவிலிருந்து தளபதி விஜய் இடைவேளை எடுக்க உள்ளார் என்று தகவல் சினிமா வட்டாரங்களில் வெளியாகியுள்ளது. 2026 ஆம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு திரைப்படங்கள் நடிப்பதிலிருந்து 3 ஆண்டுகள் விலகியிருக்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் 'விஜய் 68' படத்திற்கு பிறகு 3 ஆண்டுகள் நடிகர் விஜய் இடைவேளை எடுக்கவிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் நடிகர் விஜய் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தியதை தொடர்ந்து அவர் அரசியலுக்கு வருகிறார் என்று பேசப்பட்டு வருகிறது.

    No comments