கடலில் பேனா சிலை தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைப்பு
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக மெரினா கடற்கரையில் கடலுக்கு நடுவே பிரமாண்ட பேனா சிலை அமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், உச்சநீதிமன்றத்தில் பேனா சிலைக்கு எதிராக பல்வேறு வழக்குகள் போடப்பட்டு இருந்தன.
இந்த வழக்குகள் கோடை விடுமுறைக்கு பின்னர் விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில், இன்று கோடை விடுமுறைக்கு பின் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்கள் வேண்டும் என உச்சநீதிமன்றம் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து, தங்களுக்கு ஆதாரம் சேகரிக்க கால அவகாசம் வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை வைத்ததன் பெயரில் பேனா சின்னம் தொடர்பான வழக்குகள் தற்போது உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
No comments