அனைத்து உயிர்களுக்கும் சில அடிப்படை விஷயங்கள் உயிர்வாழ தேவையாய் இருக்கிறது. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இந்த மூன்றும் மனிதர்களின் அடிப்படை என்று சொல்லப்படுவதுண்டு. பின்னிரண்டு இல்லாமல் போனால் கூட உயிர் வாழ்தல் கடினம் எனினும், உயிர் வாழ்தல் சாத்தியம் தான். ஆனால் முன்னதான உண்ண உணவு என்பது இல்லாமல் போனால் உயிர் என்பதே நிலை கொண்டு இருக்காது.
அதனால் தான் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்றார்கள். அன்னதானம் என்பது கோவில் திருவிழாக்கள் அல்லது யாருக்கேனும் பிறந்தநாள்,வீட்டில் ஏதாவது விஷேசம் என்றால் தான் அன்னதானத்தை பார்க்க முடியும். ஆனால் அத்தகைய அன்னதானத்தை டீம் டிரான்ஸ் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தொடர்ந்து தினமும் ஒவ்வொரு நாளும் ஏழைகளுக்கும்,நடைபாதையில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கும் வழங்கி கொண்டிருக்கிறது.
டீம் டிரான்ஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் உ.ஆறுமுகசாமி |
சென்னையில் உள்ள டீம் டிரான்ஸ் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட்-ன் தலைமை அலுவலகத்தின் பகுதியில் உள்ள ஏழைகளுக்கு அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்,தொழிலதிபர் டாக்டர் உ.ஆறுமுகசாமி அவர்கள் வழங்கி ஏழைகளின் பசியை போக்கி கொண்டிருக்கிறார்.இதனால் அப்பகுதி ஏழைகள், பசி தவிர்த்து சந்தோச புன்னகையுடன் செல்கின்றனர்.டீம் டிரான்ஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்,தொழிலதிபர் டாக்டர் உ.ஆறுமுகசாமி அவர்களின் இந்த ஏழைகளுக்கான சேவை தொடர நாமும் வாழ்த்துவோம்.
0 Comments