• Breaking News

    தக்காளிக்கு ஜாக்பாட்.... ஒரு கிலோ ரூ.250-க்கு விற்பனை....

     


    பருவமழையின் எதிரொலியால் வரத்து குறைந்ததால் நாடு முழுவதும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று தக்காளி விலை புதிய உச்சம் தொட்டது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தின் ஹாபூர் நகரில் ஒரு கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்பனையானது.


    அகில இந்திய அளவில் தக்காளியின் சராசரி விலை கிலோவுக்கு ரூ.117 ஆக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விலையேற்றத்தால் அவதிப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக டெல்லி, பாட்னா, லக்னோ போன்ற நகரங்களில் ஒரு கிலோ தக்காளியை ரூ.90-க்கு மத்திய அரசு விற்பனை செய்தது.

    No comments