• Breaking News

    சென்னை கிண்டியில் புதியதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பல்வேறு வேலைவாய்ப்புகள்

     


    தமிழக அரசால் அண்மையில் சென்னை , கிண்டியில் திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், லேப் டெக்னீசியன், ECG டெக்னீசியன், அலுவலக உதவியாளர், மருத்துவ உதவியாளர் என பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த 29-ஜூன்-2023 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஜூலை 07ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..



    பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் :


    • டயாலிசிஸ் டெக்னீஷியன் – 15 காலிப்பணியிடங்கள்.

    • ஆபரேஷன் தியேட்டர் டெக்னீஷியன் – 08 காலிப்பணியிடங்கள்.

    • லேப் டெக்னீஷியன் – 15 காலிப்பணியிடங்கள்.

    • மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர் – 15 காலிப்பணியிடங்கள்.

    • கேத்தி லேப் (Cathy Lab) டெக்னீஷியன்  -04 காலிப்பணியிடங்கள்.

    • CSSD தொழில்நுட்ப உதவியாளர் – 05 காலிப்பணியிடங்கள்.

    • ஈசிஜி தொழில்நுட்ப ஆபரேட்டர் – 06 காலிப்பணியிடங்கள்.

    • ஆய்வக டெக்னீஷியன் (Manifold) – 08 காலிப்பணியிடங்கள்.

    • உடற்பயிற்சி உதவியாளர் – 02 காலிப்பணியிடங்கள்.

    • ரேடியோகிராபர் – 07 காலிப்பணியிடங்கள்.

    • கணினி பதிவாளர் (Date Entry Operator) – 5 காலிப்பணியிடங்கள்.

    • அலுவலக உதவியாளர் – 5காலிப்பணியிடங்கள்.

    • மருத்துவ உதவியாளர் – 100 காலிப்பணியிடங்கள்.

    கல்வித்தகுதி :


    அலுவலக உதவியாளர் ,  மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு தமிழ் எழுதப்படிக்க தெரிந்து இருந்தால் போதும்.

    மற்ற பணிகளுக்கு அறிவிப்பில் குறிப்பிட்டபடி அங்கீகாரம் பெற்ற கல்வி மையத்தில் தேவையான படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

    சம்பளம் விவரம் (மாத  அடிப்படையில்) :


    ரூ.12,000 முதல் 15,000 வரையில்.

    வயது வரம்பு (அதிகபட்சம்) – குறிப்பிடப்படவில்லை.


    தேர்வு செய்யப்படும் முறை : 


    சான்றிதழ் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணல் அடிப்படையில் பணியமர்த்தப்படுவர்.

    விண்ணப்பம் தொடங்கிய தேதி – 29 ஜூன் 2023.


    விண்ணப்பிக்க கடைசி தேதி – 07 ஜூலை 2023.


    விண்ணப்பிக்கும் முறை : 


    கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையின் அதிகாரபூர்வ தளமான www.kcssh.org க்கு செல்ல வேண்டும்.

    அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் எந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டுமோ அது குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

    பின்னர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை சேர்த்து அதனை குறிப்பிட்ட முகவரிக்கு வருகிற ஜூலை 7க்குள் வந்து சேரும்படி அனுப்பிவைக்க வேண்டும்.

    பின்னர் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு பின்னர் பணியமர்த்தப்படுவர்.

    அனுப்ப வேண்டிய முகவரி :


    இயக்குனர்,

    கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனை,

    கிண்டி,

    சென்னை – 600032.

    No comments