மதுரை அலங்காநல்லூரில் கரும்பு விவசாயிகள் ஆர்பாட்டம் நடைபயணம் மேற்கொண்ட விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியால் பரபரப்பு கரும்பு விவசாயிகள் போலீசாரிடையே தள்ளுமுள்ளு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் செயல்பட்டு வரும் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை தொடர்ந்து இயக்க வலியுறுத்தி கரும்பு விவசாய சங்கத்தினர் சுமார் 70 பேர் சர்க்கரை ஆலை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நடை பயணமாக 20 கிலோமீட்டர் சென்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் சென்று கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவை தொகை ரூபாய் 26 கோடியை விடுவிப்பதாகவும் தொடர்பாகவும் ,கரும்பு சர்க்கரை ஆலையை தொடர்ந்து அரசு இயக்க வலியுறுத்தியும் விவசாயிகள் நடைபயணம் மேற்கொள்ள இருந்த போது போலீசார் அவர்களை திடீரென தடுத்து நிறுத்தி அனுமதி இல்லை என கூறி வாகனத்தில் ஏற்ற முயன்றதால் கரும்பு விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீசாரை கண்டித்து சிறிது நேரம் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபபயணமாக சென்று ஆட்சியர் சங்கீதாவிடம் மனு அளிக்க உள்ளனர்.
வாடிப்பட்டி செய்தியாளர் B.குமார் 9786282878
No comments