• Breaking News

    சென்னை தலைமைச் செயலகம் அருகே தனியார் நிறுவன ஊழியர்களை அழைத்து சென்ற பேருந்து விபத்து

     


    சென்னை தலைமைச் செயலகம் அருகே தனியார் நிறுவன ஊழியர்களை அழைத்து சென்ற பேருந்து விபத்துகுள்ளாகியுள்ளது. சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான பேருந்து வேளச்சேரியில் இருந்து எண்ணூருக்கு, ஊழியர்களை அழைத்துச் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது.


    இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 13 பேருக்கு எந்த பாதிப்பும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், பேருந்தை பறிமுதல் செய்து, பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    No comments