• Breaking News

    ஆபாச மெசேஜ் அனுப்பிய கணவர் மீது நடிகை ரச்சிதா காவல் நிலையத்தில் புகார்

     


    சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி கடந்த 2015-ஆம் ஆண்டு தினேஷ் கோபால்சாமியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் இணைந்து சீரியல்களில் நடித்ததன் மூலம் இருவருக்கும் காதல் மலர திருமணம் செய்துகொண்டார்கள். பிறகு, கடந்த ஆண்டு இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் தங்களுடைய பெற்றோர்கள் வீட்டில் தனி தனியே வசித்து வருகிறார்கள்.கணவரை பிரிந்த ரச்சிதா மகாலட்சுமி சமீபத்தில் பிக் பாஸ் 6-வது சீசன் தமிழ்  நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் கூட அவர் தனது கணவரை பற்றி வாயை திறக்கவில்லை. ஆனால், தினேஷ் அவருக்கு ஆதரவாக தான் பேசி வந்தார். எனவே, ரசிகர்கள் பலரும் இருவரும் மீண்டும் இணைந்து ஒற்றுமையாக வாழ்வார்கள் என எதிர்பார்த்தனர்.


    இந்நிலையில், தினேஷ் தனக்கு ஆபாசமாக மெசேஜ் செய்வதாகவும், கொலை மிரட்டல் கொடுத்ததாகவும், நேற்று ரச்சிதா  மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். நேற்று அவர் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் ” தினேஷை பிரிந்து நன் கடந்த சில மாதங்களாகவே தனியாக வசித்து வருகிறேன். என்னுடைய போனுக்கு கடந்த சில நாட்களாகவே ஆபாசமாக மெசேஜ் செய்வது…கொலை மிரட்டல் விடுகிறார்” என புகார் அளித்துள்ளார்.இதனையடுத்து, ரச்சிதா கொடுத்த புகாரின் அடிப்படையில், மாங்காடு மகளிர் போலீசார் தினேஷை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்நிலையில், தற்போது ரச்சிதாவிடமும், தினேஷிடமும் விசாரணை நடந்து வருகிறது. கணவர் மீதே ரச்சிதா புகார் அளித்துள்ளது தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments