• Breaking News

    சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மீது எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

     


    சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி விசாரணையை தொடர்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனுவில் குற்றசாட்டியுள்ளார். வழக்கு தொடர்பாக நீதிமன்றம் மே 4ல் பிறப்பித்த இடைக்கால உத்தரவை போலீசார் கடைபிடிக்கவில்லை என அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளார்.


    எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 7க்குள் பதிலளிக்க குற்றப்பிரிவு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவலை தெரிவித்ததாக மிலானி என்பவர் அளித்த புகாரை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. அதாவது, 2021 தேர்தலில் சொத்து விவரத்தை மறைத்து வேட்புமனு தாக்கல் செய்ததாக எடப்பாடி பழனிசாமி மீது சேலம் போலீஸ் வழக்கு பதிவு செய்திருந்தது.

    No comments