• Breaking News

    மதுரை வாடிப்பட்டி பேரூராட்சி குப்பை கிடங்கில் அனுமதியின்றி கிராவல் மணல் அள்ளியதாக ஜேசிபி,இரு லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

     


    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் அனுமதியின்றி சட்டவிரோதமாக ஜே.சி.பி. இயந்திரம் மூலம் லாரிகளில் கிராவல் மணல் அள்ளுவதாகவும் 50க்கும் மேற்பட்ட முறை கிராவல் மணல் லாரிகள் மூலம் கடத்தி செல்வதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி லாரிகளை சிறை பிடித்து பேரூராட்சி குப்பை கிடங்கு முன் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பானது.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற வாடிப்பட்டி போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    No comments