ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு விழா அழைப்பிதழ் தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்க நிறுவன தலைவரிடம் வழங்கப்பட்டது
ஈரோடு மாவட்டம் , அந்தியூர் வட்டம் பட்லூர் கிராமம் எண்ணியம்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கும்பாபிஷேக விழாவிற்கு தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்.விஸ்வநாதன் நாடார் மற்றும் நிர்வாகிகள் இடம் கோவில் விழா கமிட்டி பெரியோர்கள் , நாமக்கல் மாவட்ட நிர்வாகி கிருஷ்ணகுமார் தலைமையில் விழா அழைப்பிதழை வழங்கி தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறவுகளையும் தவறாமல் வருமாறு அன்போடு அழைப்பு விடுத்தனர். இந்நிகழ்ச்சியில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் கணேஷ் , மாநில உயர்மட்டக்குழு ஆலோசகர் செழியன் ,மாவட்ட நிர்வாகி திருப்பூர் தீபன் , திங்களூர் ராஜ் மோகன் ,சரவணன் , மகளிர் அணி சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments