பழனி முருகன் கோவிலில் முதியவரை மின்இழுவை ரெயிலில் ஏற்ற மறுத்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா இணை ஆணையர் மாரிமுத்து?
பழனி கோவிலில் சிறுவர்கள், வயதான முதியவர்கள் எளிதாகவும், விரைவாகவும் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்ய மின்இழுவை ரெயில் மற்றும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.அதன்படி கிருஷ்ணகிரியை சேர்ந்த வயதான பக்தர் ஒருவர் பழனிகோவிலுக்கு சாமிகும்பிட வந்தார்.
மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கீழே இறங்குவதற்காக மின்இழுவை ரெயிலில் ஏற முயன்றபோது அவரை ஊழியர்கள் ஏற்ற மறுத்துள்ளனர்.
![]() |
கோவில் இணை ஆணையர் மாரிமுத்து |
தன்னால் படிப்பாதையில் நடந்து செல்ல முடியாது என அவர் கெஞ்சி கேட்டும் ஊழியர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அந்த முதியவர் படிப்பாதையில் தனது 2 கைகளை ஊன்றியபடியே தவழ்ந்து இறங்கி வந்தார்.
இதை அங்கிருந்த பக்தர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
பழனி கோவிலுக்கு வரும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்காகத்தான் மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகியவை இயக்கப்படுகிறது.
பணம் படைத்தவர்கள் மற்றும் வி.ஐ.பிகளுக்கு மட்டுமே ரோப்கார் உள்ளதா என்ற கேள்வி பக்தர்களிடையே எழுந்துள்ளது.
முதியவரை மின்இழுவை ரெயிலில் ஏற்ற மறுத்த ஊழியர்கள் மற்றும் கண்காணிப்பாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் கர்ப்பிணிகள், உடல்நலம் குன்றியவர்கள் என யாரிடமும் பாகுபாடு காட்டக்கூடாது என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேர்மையான அதிகாரி என பெயர் பெற்ற இணை ஆணையர் மாரிமுத்து நடவடிக்கை எடுப்பாரா?
No comments