• Breaking News

    தமிழகத்தில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

     


    தமிழக சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர், 500 சில்லறை விற்பனை மதுக்கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக்கோரிக்கையின் போது அறிவித்ததன் பேரில் தற்போது 500 மதுக்கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


    மேலும் கடந்த ஏப்ரலில் இது தொடர்பாக 500 டாஸ்மாக் சில்லறை விற்பனைக்கடைகளைக் கண்டறிந்து மூடுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது, இந்த அரசாணையில் குறிப்பிட்டது போல் தமிழகம் முழுவதும் உள்ள மதுபானக் கடைகளில் 500 மதுபானக்கடைகள் நாளை (22.06.2023) முதல் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    No comments